தமிழக அரசு கிராம VAO ஆபிசில் கிராம உதவியாளர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி நியமன பதவி விபரம்
1. கிராம உதவியாளர்
ஊதியம் ஏற்ற முறை
ரூ. [11100-35100 ] நிலை - [6 ] [சிறப்பு நிலை ஊதிய விகிதம் [Rs .11100-34100 level – 6 [special time scale of pay ]
காலிபணியிட எண்ணிக்கை
[ 15 ]
2. நிபந்தனைகள் ;
1. மேற்படி பதிவுகளுக்கான நேரடி நியமனத் தின்போது அரசு பணியாளர்கள் தேர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்புவாரி சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் கீழ்கண்டவாறு பின்பற்றப்படும் .
வருவாய் கிராமத்தின் பெயர்
1. பாண்டமங்களம்
பணியிட எண்ணிக்கை
1
இனசுழற்சி எண் மற்றும் விபரம்
பொதுப்போட்டி [முன்னுரிமை அற்றவர் ] முன்னாள் இராணுவத்தினர் [முன்கொணர் பணியிடம்]
2. சூரங்கோட்டை
1
ஆதிதிராவிடர் [முன்னுரிமை பெற்றவர்]
3.பிரப்பன்வலசை
1
மிகவும் பிற்படுத்தட்டோர் மற்றும் சீர்மரபினர் [ முன்னுரிமை அற்றவர் ]
4. கழுகூரணி
1
பிற்படுத்தப்பட்டோர் [ முஸ்லீம்கள் தவிர ] [முன்னுரிமை அற்றவர் ]
5.வாலாந்தரவை
1
பொதுப்போட்டி [ முன்னுரிமை அற்றவர் ]
6.பட்டிணம்காத்தான்
1
பிற்படுத்தப்பட்டோர் , முஸ்லீம்கள் [ D.W. பெண் ] [முன்னுரிமை அற்றவர்]
7.அத்தியூத்து
1
பொதுப்போட்டி [முன்னுரிமை பெற்றவர் ]
8.தொருவாளுர்
1
ஆதிதிராவிடர் [முன்னுரிமை அற்றவர் ]
9. குயவன்குடி
1
மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற் றும் சீர்மரபினர் [ பெண் ]
[முன்னுரிமை அற்றவர் ]
10.காவனூர்
1
பிற்படுத் தப்பட்டோர் [ பி.ப.முஸ்லீம்கள் தவிர] முன்னுரிமை பெற்றவர் ]
11.கும்பரம்
1
பொதுப்போட்டி [ முன்னுரிமை அற்றவர் ]
12.எனமணங்கொண்டான்
1
மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற் றும் சீர்மரபினர் [முன்னுரிமை அற்றவர் ]
13.ஆர்.எஸ்.மடை
1
பிற்படுத்தப்பட்டோர் [ முஸ்லீம்கள் தவிர] பெண் [முன்னுரிமை அற்றவர்]
14.அலமனேந்தல்
1
பொதுப்போட்டி பெண் [முன்னுரிமை அற்றவர் ]
15. தேர்போகி
1
பிற்படுத்தப்பட்டோர் [முஸ்லீம்கள் தவிர ] [முன்னுரிமை அற்றவர் ]
2. நியமனத் தின்போது தெரிவு செய்யப்பட்ட தகுதியும், தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் அதே வகுப்பினைச்சார்ந்த பிற விண்ணப்பத்தாரர்களைக் கொண்டு நிரப்பப்படும் .
3.நியமனத் தின்போது தெரிவு செய்யப்பட்ட தகுதியும்,தகுதியும் வாய்ந்த முன்னாள் இராணுவத் தினர் கிடைக்கப்பெறாவிடில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் அதே வகுப்பினைச் சார்ந்த பிற தகுதியுடைய விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
4.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யும் வருவாய் கிராமத்திற்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வசிக்கும் முகவரியைக் கொண்டவராக இருக்க வேண்டும் .
3.தகுதிகள்
அ] வயது [01.07.2020 ] அன்று வயது
1.விண்ணப்பதாரர்கள் [21 ]வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும் .
2. விண்ணப்பதாரர்கள் [01.07.2020 ] அன்று கீழ்க்கண்ட வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்கக்கூடாது.
1. பொது பிரிவினர் [OC ]
30 வயது
2.இதர அனைத்து வகுப்பினர்
35 வயது
3. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு அரசாணைப்படி வயது வரம்பு விலக்களிக்கப்படும்.
ஆ] கல்வித் தகுதிகள் ;
1.விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் [5 ]ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
இ] இதர தகுதிகள் ;
1. விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு வெளியிடும் நாள் அன்று தமிழ்மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் உள்ளவராக இருக்க வேண்டும்
2. மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
4. தெரிவு முறை ;
மேற்படி காலிப்பணியிடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலகம் மூலம் பெறப்படும் பட்டியல் மற்றும் இவ்விளம்பரம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகிய அனைத்திற்கும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் . இப்பணியிடங்களுக்கான நபர்கள் , நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வகுப்புவாரி சுழற்சிக்கு உட்பட்டும், காலிப்பணியிட எண்ணிக்கைக்கு உட்பட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு கட்டாயம் முகக்கவசம் [mask ] அணிந்து வருகை புரிய வேண்டும் . நேர்முகத் தேர்விற்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள் . நேர்முகத் தேர்வு சமூக இடைவெளி [social distance ] பின்பற்றி நடைபெறும் . முழுவதுமாக பூர்த்தி செய்யப்படாத [அ] அனைத்து சான்றிதழ்களும் இணைக்கப்படாத [அ] நிர்ணயிக்கப்பட்ட வயதினைக் கடந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித அழைப்பாணையோ, இது குறித்து எவ்விதத் தகவலோ வழங்கப்படமாட்டாது.
5.விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய இணைப்புகள் ;
விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் , முழு முகவரி , பிறந்ததேதி , மதம் , இனம் , கல்வித் தகுதி ,முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் உள்ளிட்ட விபரங்களை ஒரு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது எழுத்தால் எழுதியோ மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒன்றை விண்ணப்பத்தில் ஒட்டியும் ,மற்றொரு புகைப்படத்தினை இணைத்தும் தகுதியான சான்றுகளின் நகலுடன் அனுப்ப வேண்டும் . அசல் சான்றுதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பக்கூடாது.
6. நேர்முகத்தேர்வு ;
நேர்முகர் தேர்வுகளை அழைப்புக் கடிதம் விண்ணப்பத்தாரர்கள் அவர்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பப்படும்.நேர்முகத் தேர்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தாரர்கள் அவர்களுடைய அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஒன்றுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் நேர்முகத் தேர்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் எந்த நிலையிலும் இது தொடர்பாக எந்த உரிமையும் கோர இயலாது. நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் , இவ்வலுவலகத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கு அனுப்பப்படும் அழைப்பாணையைக் கட்டாயம் நேர்முகத்தேர்வன்று கொண்டு வரவும் .
7.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறுதல் ;
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர், இராமநாதபுரம் 623504 என்ற முகவரிக்கு மாலை 05.45 மணிக்கு முன்னாள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும் . குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இராமநாதபுரம் மாவட்டம் , இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் [05.08.2020 ] பிற்பகல் [05.45 ] மணி வரை இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்குமாறு வரவேற்கப்படுகிறன.
ஓம்\வா.முருகவேலு,
வட்டாட்சியர்,இராமநாதபுரம்.
வெ,ஆ.எண்.52\2020
செமதொஅ\இராமநாதபுரம்.
0 Comments