தமிழக​ அரசு திறன் மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு

தமிழக​ அரசு திறன் மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு


இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.



பதவியின் பெயர்:

திறன் பயிற்சி

மாதம் சம்பளம்: -

வயது வர்ம்பு: 18 to Any

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து அவர்களது வேலைபெறும் திறனை அதிகரித்து அதன் மூலம்
தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று வழங்கும் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 தற்போது கொரோனா நோய் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன்அனுபவங்களை கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில்
பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் திறன் பயிற்சி தேவைப்படும் நேர்வுகளில் அவர்களுக்கு உரிய திறன்பயிற்சி வழங்கி தனியார்துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் தேவையான
நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்கொண்டு வருகின்றது.


எனவே வெளிநாடுகள் மற்றம் இதர மாநிலங்களிலிருந்து தேனிமாவட்டத்திற்கு திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற உதவுவதற்கென தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட (https://www.tnskill.tn.gov.in) என்ற இணையதளப்பக்கத்தில் பதிவு செய்து மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திருமதி ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments