ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் எனவும் உறுதியளித்தார். மேலும், 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், இந்தாண்டு மட்டும் 89 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதில் 70% இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், எந்தெந்த மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படாமல் இருக்கிறதோ, அவற்றை கண்டறிந்து இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களில் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் புதிய தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்றும், எந்த நாட்டில் இருந்து வரக்கூடிய எத்தகைய தொழிற்சாலைகளாக இருந்தாலும் அதில் பணிபுரியக்கூடிய வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்க பல்வேறு திறன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் சி.வி.கணேசன், திமுக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சமில்லை என்றும், எத்தனை இளைஞர்கள் படித்தாலும் அத்தனை இளைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார்.
இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் போட்டித் தேர்வு பயிற்சி
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தொடர்பாக சென்னையில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ( TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 24-07-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள TNPSC -Group IV தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லாப் பயிற்சி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 வரை மூன்று மாதக் காலம் நடைபெற உள்ளது. மேற்படி பயிற்சிக்கு குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு மேற்படி தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. மேலும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 27-04 - 2022 முதல் 11 - 05 - 2022 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியில் சேரவிரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விபரம் விரைவில் வெளியிடப்பட்டு, இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். மே மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments