BC,MBC,DNC பிரிவினருக்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2022

BC, MBC, DNC - இன மக்களுக்கு குழு அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க நிதி உதவி வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகு ரூ.3 இலட்சத்தில் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு தொழிலில் ஈடுப்பட்டு வரும் BC, MBC, DNC வகுப்பை சார்ந்த 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக பின்வருமாறு வழங்கப்படும், Single Needle machine (5) 100000/- Over lock machine  –(1) 30000, Cutting machine  (1) 15000, Cutting table (1) 15000/- , Industrial ironing table  (1) 30000/-, இடைநிகழ் செலவினம் (Incident ant Charges) 50000/-, பணி மூலதனம் (Working capital) 50000/- ஆக மொத்தம் ஒரு குழுவிற்கு ரூ,3,00,000/- வழங்கப்படும்.

பயனாளர்களின் தேர்வு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

1. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
2. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, small and medium enterprise)) துறை மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. விதவை, கணவானால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
4. 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
5. 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.
6. குழு உறுப்பினர்கள் BC, MBC (ம) DNC இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
7. குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
BC,MBC,DNC People Ready-Made Garment Manufacturing The Scheme 2022


எனவே, இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அணுபமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது,

செய்தி வெளியீடு
மக்கள் தொடர்பு அலுவலர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சென்னை மாவட்டம்
PUBLISH DATE : 29/09/2022
Official Website:https://chennai.nic.in/
BC,MBC,DNC People Ready-Made Garment Manufacturing The Scheme 2022

Official Notification chennai.nic.in Press Clip Link PDF Download:

Official Website Press Release Page Link Click Here
Official Notification PDF Link: Click Here

Post a Comment

0 Comments