தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024.இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து படிப்புகளுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு.இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.மேலும் தகவல்களுக்கு Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.முகாம் நடைபெறும் நாள்16.02.2024
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 16.02.2024 அன்று உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இவ்வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி,பட்டதாரிகள்,பட்டயப்படிப்பு படித்தவர்கள்,ஐடிஐ,தொழில்கல்வி கற்றவர்கள்,பொறியியல் பட்டம்,கணினி இயக்குபவர்கள்,ஓட்டுநர்கள்,தையல் கற்றவர்கள், என அனைத்துவித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும்.
இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
DDU-GKY திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.எனவே நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது வேலை நாடுநர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும்,விவரங்களுக்கு உதகமண்டல மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அல்லது தொலைபேசி எண்:0423 - 2444004, 7200019666, மின்னஞ்சல் முகவரி ootyjobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு. அருணா இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments